Enable Javscript for better performance
வெல்லும் சொல்: கே.நடராஜன்- Dinamani

சுடச்சுட

    

    சொல்லலாம் எதையும் ...சொல்வதை 
    செய்து காட்டவும் வேண்டும் தம்பி !

    வெல்லலாம் எவரையும் வெறும் 
    வாய்ப் பேச்சால் என்று நினைப்பது 
    மணலில் வீடு கட்டி அதை விற்க 
    நினைப்பது போல !

    செய்வதை மட்டும்  நீ சொல் ...தம்பி !
    சொன்னதை செய்தும் காட்டு, உன் சொல்லை 
    நம்பும் உன் ஊருக்கு !

    உன் சொல்வாக்கு ...அதுவே 
    உன் செல்வாக்காக  இருக்க வேண்டும் 
    தம்பி !

    நீ வெல்லலாம் ...இல்லை  தோற்கலாம் !
    கேள்வி அதுவல்ல !
    வெல்வது என்றும் உன் சொல்லாக 
    இருக்க வேண்டும் தம்பி !

    வெல்லும் உன் சொல், வெல்லும் 
    மற்றவர் இதயத்தையும் என்றும் !
    மறவாதே இதை நீ ... தம்பி !

    நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் 
    வெல்லும் சொல்லாக தன்னால் 
    மாறும் அப்போது !

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai