Enable Javscript for better performance
வெல்லும் சொல்; சரஸ்வதி ராசேந்திரன்- Dinamani

சுடச்சுட

    

    ஒரு சொல் வெல்லும்
    ஒரு சொல் கொல்லும்
    கெட்ட சொல்லோ
    குழிபறிக்கும்

    குப்புறத் தள்ளும்
    பதை  பதைக்க வைக்கும்
    வதைக்கும் வலி கொடுக்கும்

    நல்லசொல்லோ
    உற்சாகம்தரும்
    உத்வேகம் கொடுக்கும்
    வாழ்வில் வெற்றியை கொடுக்கும்
    சிகரம் ஏற்றும்   மற்றவருக்குத்

    தொல்லைத்தராத
    நல்ல சொல்லே
    வெல்லும் சொல்
    வெல்லும் சொல்லிருக்க

    கொல்லும் சொல் எதற்கு
    கொச்சை சொற்கள் எல்லாம்
    இச்சை சொல்லாக்கொள்பவரே அதிகம்
    சொல் சுகமானால் சுனாமி இல்லை
    சொல் சூடானால் பூமியில் வெப்பம் கூடும்
    கனியிருக்க காய் வேண்டாமே

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai