சுடச்சுட

  

  சொல் ஓர் ஆயுதம்!
  சொல் ஓர் கேடயம்!
  சொல் ஓர் கூர் வாள்!
  ஒற்றை சொற்பிழை கோவலன் உயிர் எடுத்தது!
  சொல்லின் இனிமை பேச்சின் வன்மை!
  சொல்லின் வன்மை  விலக்கும் கேண்மை!
  சொல்லும் சொல்லில் வேண்டும் உண்மை!

  வெல்லும் சொல்லில் வெளிப்படும் தமிழின் திண்மை!
  ஆற்றுபடுத்த செல்கையில் ஊற்றாய் பெருக்கெடுத்தாலும்
  தேற்றலே தெள்ளத்தெளிவாய் பிரதானம்!
  கொல்லன் தெருவில் ஊசி விற்க திறமைவேண்டும்!
  கற்றவர் முன் சொல்லாட  புலமை வேண்டும்!

  நுனிப்புல் மேய்கையில் நனி சிறக்காது சொல்!
  ஆழ்ந்து வாசிக்கையில் அகத்தில் சிக்கிடும் அரும்சொல்!
  சொல்லாடலில் விளையாட சொற்புலமை அவசியம்!
  செல்லுமிடமில்லாம் சிறப்பெய்த சொல்வாக்கு வசியம்!
  வெல்லும் சொல்லை அறிந்திட்டால்
  வெற்றி மாலை உனக்கு!

  நாவன்மை சித்திக்க நயமாகும் வெல்லும் சொல்!
  நாடு முழுதும் தித்திக்கும் நீ சொல்லும் சொல்!

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai