சுடச்சுட

    
    உரக்கப் பேசி
    உணர்வினைத் தூண்டி;
    இரக்கப் பேசி
    இயல்பினை மாற்றி;
    இயலாத வெல்லாம்
    இயலவிடுவது − என்
    இயல் பெனக்கூறி;
    மூடனை
    ஞானியாக்குவதாய்;
    முடவனை
    ஓட வைப்பதாய்;
    எல்லாம் என்
    திறமை யெனக்கூறி
    வாழ்க்கையை
    வென்றதாய் − அம்
    மூடன் காசைக்
    குவிக்கிறான்,
    அப்பாவிகள்
    அடப் பாவிகளாய்;
    இது வென்ற சொல்லா
    இல்லை
    கொள்ளைச் சொல்;
    காலங்காட்டும்
    ஒருநாள்
    கண்ணாடியாய்;
    அவன் நாடியை
    புற்று கூடியதாய்;
    வெற்றுக்கூடு
    மெய்யெனவே!
    நரியின் சாயம்
    வாய்மையாற் றெரியும்
    காகிதக் கீரையென்று...
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai