சுடச்சுட

  

  பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே 
  சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே
  பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே 

  பிறர் விரும்பும்  சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!
  சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே 
  பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே 
  இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன் 
  பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

  அவையறிந்து சொல்லைச் சொல்பவன்  அறிவுடையவன் ஆவான் 
  தவறான சொல்லை சொல்பவனே  முட்டாள் எனப்படுவான் 
  சொல்லாற்றல்  மனிதனை  என்றும் மண்டியிடச் செய்யாது 
  எவர் எதிர்த்து வரினும்  அவர் எதிரில் தலை வணங்காது !

  சொன்னதை எல்லாமே  உடனே  செய்துவிட  முடியுமா 
  காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா 
  பழி  பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா 
  நியாத்தை  நினைந்து  உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

  கவிஞ்சன் சொல்லைக்  கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான் 
  பேச்சாளனோ பேச்சாற்றலால்  சபையில்  மதிக்கப்படுகின்றான் 
  சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு  ஏதாவது விலையுண்டா 
  வெல்லும்  சொல்லை  உடையவனுக்கு  பகைமை  உண்டா !

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai