சுடச்சுட

  

  தடைகளை உடைக்கும்
  கரங்களைக் கோர்த்து
  மேல்நோக்கி உயர்த்தும்
  அதிகார முடிகளை
  ஆட்டுவித்து அகற்றும்

  வெல்லும் சொல்
  முடியும்!
  நெஞ்சில் நிறுத்துங்கள்
  விடியும்!

  நம்பிக்கை விதைகளை
  நெஞ்சில் விதைத்து
  உணர்வு உரத்தைத் தூவி
  சாதிக்கும் எண்ண வெப்பத்தோடு
  வளர்க்கும் சாதனையெனும் மரத்தில்
  வெற்றியெனும் பூக்களை மலரவிடும்
  ஒற்றைச் சொல்…
  முடியும்!

  கிரீடத்தின்மேல் அமரும்
  மயிலிறகல்ல…
  வடுக்களின்மேல் வருடும்
  மயிலிறகு!

  கலசமல்ல…
  தாங்கி நிற்கும்
  அடிவாரம்!
  பூக்களல்ல…
  உறுதியான வேராய்
  வெல்லும் சொல்!

  திசை திருப்பும்
  எண்ணங்களை
  தீயிட்டு பொசுக்கும்
  அகத் தீ!
  நாளை சுடர்விடும்
  வெற்றி தீபமாய்!

  அடியும் இடியும்
  ஒடியும்!
  தடியும் பிடியும்
  உடையும்!
  முடியும் படியும்!
  முடியும் சொல்லால்
  விடியும்!

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai