சுடச்சுட

  
  பள்ளிக்கூட வாசம் அறியாத 
  பட்டிக்காட்டுப் பிள்ளைகள் நாங்கள்
  பச்சை மலை ஓரம் 
  படர்ந்து கிடந்த 
  அந்த மந்தைவெளிகளில் 
  ஆடு மாடு மேய்த்தேதான்
  ஆகாச வானில் பறக்கும்
  பறவைகளுடன் போட்டிக்கு 
  பட்டமிட்டே 
  பரவச ஆனந்தத்தில்
  பள்ளம் மேடுகள் 
  பலவும் தாண்டி குதித்து
  குதூகலத்துடன் குளக்கரையில்
  நல்ல குளியலோடு
  சும்மா கும்மாளமும் போட்டு
  அக்கம்பக்கம் உள்ளவர்களின்
  அறிவுரை கேட்காமல்
  அப்பா அம்மாவுக்கும்
  அடங்காமல் அடம்பிடித்து
  நானே ராஜா நானே மந்திரியென
  திரிந்தக் கூட்டமான
  நாங்கள் இப்போ...
  திருந்தி திசைமாறி திகழ்வது
  ஏவுகணை நாயகனின்
  வெல்லும் சொல்லாலென்று
  உங்களுக்குத் தெரியுமா?
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai