சுடச்சுட

  

  வாழ்க்கை என்பதும் ஒரு
  போராட்டம் போர்க்களம்
  இழந்ததை விட்டு விட்டு
  வாழ மிச்சத்தை மீட்போம்

  எத்தனையோ டன் உணவு
  தினமும் வீணாகிறது பசியும்
  மறுபுறம் கூடுகிறது உணவு
  மிச்சதை மீட்போம் வாரீர் 

  ஆயிரம் ஆயிரம் மரங்கள்
  வெட்டப்பட்டு பசுமை இழந்த
  நிலையில் மரம் வளர்ப்போம்
  மிச்சத்தை மீட்போம் வாரீர்

  அள்ளிய சுரண்டிய ஆற்று
  மணல் போனது போகட்டும்
  இருப்பதையாவது  காத்து
  மிச்சத்தை மீட்போம் வாரீர்

  ஓசோனில் விழுந்த ஓட்டை
  பெரிதாகி வருவதை நிறுத்த
  காற்று மாசை தடுப்போம் 
  ஒசோன் மிச்சத்தை மீட்போம்

  இழந்த கிராம சுக போக
  வாழ்க்கை போதும் மீண்டும்
  உயிர் கொடுத்து கிராமத்தை
  மிச்சத்தை மீட்போம்  ஆம்

  விளை நிலங்கள் விலை 
  வீடுகளாக மாறிய போது
  பசுமை இழந்து வெப்பம் கூட
  நிலம் மிச்சத்தை மீட்போம்

  அடுத்த தலைமுறை வாழ
  நீரையும் நிலத்தையும்
  தூய காற்றையையும் 
  இயற்கையையும் மிச்சத்தை
  மீட்போம் பாதுகாப்போம் ...

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai