சுடச்சுட

    
    நம்பிக்கை முழுவதுமாக
    இழந்துவிடவில்லை. 
    இன்னும் மிச்சமிருக்கிறது...
    
    புதிய பாதையில் போனாலும்
    பழைய பண்பாடு 
    அழிந்து விடாமல்
    இன்னும் மிச்சமிருக்கிறது..
    
    காவிரி நீர்ப் பிரச்சனை
    கை நழுவிப் போனாலும்
    தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்
    தந்து விடுவார்கள்
    என்னும் எதிர்பார்ப்பு
    இன்னும் மிச்சமிருக்கிறது...
    
    எல்லோரும் காந்தி இல்லை
    என்றாலும்
    எல்லோரும் கோட்சே இல்லை
    என்னும்  எண்ணம்
    இன்னும் மிச்சமிருக்கிறது...
    
    மனிதர்களிடையே
    மனித நேயம்
    இன்னும் மிச்சமிருக்கிறது... 
    
    எல்லாவற்றையும்
    இழந்து விட்டாலும்
    வாழ்ந்து விட வேண்டும் என்னும்
    வெறி
    இன்னும் மிச்சருக்கிறது... 
    
    மிச்சங்களை  மீட்போம்
    மிச்சமுள்ள வாழ்க்கையை
    மகிழ்வுடன் வாழ்வோம்..
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai