சுடச்சுட

  
  வளங்கள் செழித்த நாடாம்
  நம் தமிழ் நாடு..
  மலர்களும் மரங்களும்
  செடி கொடிகளும்
  தத்தம் வனப்பால்
  மணம் வீசி தாயாய்
  அரவணைத்த நாடாம்
  நம் தமிழ் நாடு..
  
  சங்க இலக்கியங்கள்
  கொண்டாடிய நாகரிகம் தோன்றிய
  நாடாம் நம் தமிழ் நாடு..
  
  இன்று இயற்கையை
  இம்சித்து வளங்கள்
  சூறையாடப்பட்ட சூழலில்
  
  இன்றைய தலைமுறையினர்
  மிச்சத்தை யாவது மீட்போம் என
  உறுதி கொள்வோம்..
  
  நெகிழி ஒழித்து
  இயற்கை உரம் தனை ஊட்டி
  தாய்மண்ணை சக்தியாக்குவோம்.
  
  நாகரிகம் வளர்த்த நதியினை
  நீரோட்டமாக்க
  மணல் கொள்ளையை
  தடுத்து கரையோரம்
  
  கன்றுகள் மரக்கன்றுகள்
  நட்டு மழைநீரை 
  நீர் ஆதாரமாக்குவோம்..
  
  எச்சம் மிச்சம் மீட்க
  எள்ளளவும் பிசகாமல்
  எந்திரமாய் தந்திரமாய்
  செயல்பட்டால்
  மந்திரமாய்
  வளங்கள் மீண்டும்
  செழித்து வளரும்
  பத்திரமாய் பாதுகாப்போம்
  இயற்கையை..
  
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai