Enable Javscript for better performance
மிச்சத்தை மீட்போம்: உஷா முத்துராமன்- Dinamani

சுடச்சுட

    
    மண்ணில் புதைந்த நிலத்தடி நீர்
    கண்ணில்  பட  மறுத்து 
    மின்னலென  மறைந்து 
    வருவதை  உணர்ந்து 
    இருக்கும்  மிச்சமான
    நீரை மீட்டு  நம் சந்ததியினர் 
    கரை சேர உதவுவோம்!
    உடற்பயிற்சியினை  மறந்து
    வாகன சவாரி  செய்து 
    வெளியிடும்  காற்று 
    தெளிவின்றி  மாசு அடைந்து 
    வருவதை  உணர்ந்து 
    நடைப்பயிற்சி  செய்து 
    உடல் ஆரோகிக்யத்தையும் 
    கடலிலிருந்து  வீசும் காற்றையும்
    மிச்சமென  மீட்டு நம் சந்ததியினர்  
    அச்சமின்றி வாழ  உதவுவோம்!
    அலைபேசியும், தொலைக்காட்சியும் 
    கலைத்த  நம் மனதினை 
    வலையிலிருந்து  மீட்டு நம்  சந்ததியினருக்கு 
    தலைமுறையினை  புரிய  வைப்போம்! 
    மிச்சம்....மிச்சம்......மிச்சம்.......
    என  உச்சக்  குரலில் கூவுவதைவிட்டு 
    நடைமுறையில்  நிறைவேற்ற 
    முயற்சித்து .....
    அயர்ச்சியின்றி  உழைப்போம்!   
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai