சுடச்சுட

  
  நலிந்திருக்கும் மனிதநேயம் முடியும் முன்னே
      நல்லவற்றை மீட்டெடுத்து மனிதம் காப்போம்.
  பொலிவற்றுக் கிடந்திருக்கும் நல்லெண் ணங்கள்
      பொய்த்துவாடிப் போவதற்குள் மீட்டெ டுப்போம்
  வலிவின்றிப்போயிருக்கும் அறிவை சிந்தை
      வானுயர எழுவதற்கு வழிவ குப்போம்.
  கொலுவேற்றிக் கும்பிடுவோம் குறைகள் இல்லாக்
     கொள்கைகளை அரங்கேற்றி மனம்ம கிழ்வோம்.
  
  மிச்சமுள்ள நாகரிகம் மீட்டெ டுத்து
      மேன்மைகொளும் சமுதாயம் காண வைப்போம்
  பச்சைமண்ணை அதில்நடக்கும் விவசா யத்தை
      பார்க்கெல்லாம் சோறூட்டும் உழவர் தம்மை
  இச்சகத்தில் மீட்டெடுத்து வாழ்வு கொள்ள
      எமதுமண்ணில் இடங்கொடுப்போம் ஏழ்மை நீக்கி
  மெச்சுகின்ற உயர்வதனை அவர்க்க ளிப்போம்
      மேதினியில் இழந்தசெல்வம் மீட்டெ டுப்போம்.
  
  அரசியலில் இழந்துநிற்கும் கௌர வத்தை
      அனைவருக்கும் உழைப்பதனால் மீட்டெ டுப்போம்.
  வரலாற்றில் பறிகொடுத்த சிறப்பை எல்லாம்
      வரும்நாளில் வரலாறாய் ஆக்கி வைப்போம்.
  பரவலாகத் தமிழ்நாட்டை முதலி டத்தில்
      பார்போற்றக் கொணர்ந்திடுவோம் வெற்றி டத்தை
  நிரவிடவே தலைமையினைத் தேர்ந்தெ டுத்து
      நேர்வழியில் மீட்கவெற்றி நமதே யன்றோ!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai