சுடச்சுட

    

    மிச்சத்தை மீட்போம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

    By கவிதைமணி  |   Published on : 18th June 2018 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலங்குச்சிகள் செய்த வேலை-
    இப்பொழுது சில களிம்புகள்,  
    பற்களின் விளிம்புகளில்
    செய்து கொண்டிருக்கின்றன—
    
    அன்று திண்ணைப்பள்ளிகள்
    வித்தையின் விந்தைகள்,
    இன்றோ கல்விக்கடைகள் பல
    முதலீடு செய்யும் பங்குச்சந்தைகள் –
    காற்றிலிருந்து
    
    காணாமல் போனது  நீர் சத்து .
    ஒரு ஈரமில்லா மனித
    மனங்களைப்போல்
    உலர்ந்து வருகிறது --
    வாழ்க்கை மரங்களில்
    எங்கே க்ளோரோபில் ?
    
    பசுமைக்காதல் இல்லாத
    வரட்டுத் திருமண உறவுகள் --
    தாய்ப்பாலாய் ஒரு கார்பன் –
    அந்த எரிபொருள்
    தாங்கிப்பிடித்து எரிய வைக்க வேண்டுமே
    வாழ்க்கை விளக்கை ?
    
    “வெளிச்சம்” “சூடு”
    இரண்டுமின்றி ஒரு சூரியன்--
    அப்படிதான், தொழிலில் “நாணயமும்  நியாயமும்” ..
    இவற்றை கடத்தியது யார் ??
    பேராசை அரக்கனோ ?
    
    பசு வளர்த்து
    பயிர் செழித்த பூமி –
    பூனை வளர்த்தோம்
    புதைக்குள் விழுந்தது
    நாமா ? நம் நிலமா ??
    
    நமக்குள் பாரதப் பண்பாடு
    சீராகத்தான் ஓடிக்கொண்டிருந்தது-
    இந்த ரயிலை தடம் மாற்றியது யார் ?
    நிற்கட்டும்
    
    தோல் தான் உரிந்துள்ளது-
    மரபணு மாறவில்லை..
    இனியாவது
    இந்தியப்பெண்களின்
    கருப்பைகளில் கலாசாரத்தை
    கருத்தரிக்க வைப்போம் –
    புறப்படு –  மிச்சத்தை மீட்க புறப்படு
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai