சுடச்சுட

  

  மிச்சத்தை மீட்போம்: கவிஞர்  அரங்க.கோவிந்தராஜன்

  By கவிதைமணி  |   Published on : 18th June 2018 03:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகவை அறுபதை தாண்டியவன் அகத்தியன்
   அவனுக்கு துணையாய் அமைந்த நல்லாள் நவமணி
  புகழின் உச்சியில் ஊரில் இருந்தார்கள், இருந்தாலும்
   புதல்வன் வீட்டில் வாழ புகுந்தனர் பொல்லாத காலம்!
  
  அப்படியே வாழ்க்கையை திருப்பி போட்டார் போலானது!
   அமைந்தது வாழ்க்கை மகன் வீட்டில் பெங்களுரில்
  இப்படியே கலாச்சாரம் மாறி சிறுக சிறுக
    பழைய வாழ்க்கை மறந்தே போனது அவர்களுக்கு
  காலையில் வீட்டின் கதவு திறந்து வாசல் தெளித்து
    கோலமிட்டு வரவேற்போம்  மகாலட்சுமியை ஊரில்
  காலையில் அடைக்கப்பட்ட கதவு, யார்விழிப்பது கேள்வி
    பால்பாக்கட், பூப்பொட்டணம், செய்தித்தாள் அலங்கரிக்கும்
  
  வேலைக்காரி வீட்டு வேலைசெய்வாள், அதன்பின் வீடே எழும்
    காலை உணவு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும்
  ஒருநாள் நூடில்ஸ், பின் சாதா பூரி, பானிப்பூரி, பிஜுகொளபாத்
    ஒருநாள் மாறிமாறி குடி கொள்ளும் காலை உணவாக!
  மதிய உணவாக பெரும் பாலும் கலவன் சாதமே இடம் பெறும்
    வேலைக்கு போவோர்க்கு எடுத்துச் செல்லா ஏதுவாக
  மாலையில் சூப்பு இடம் பெறும், டீ , காபி சிலசமயம்
   எடுப்புச் சாப்பாடு சப்பாத்தி , மற்றும் ஜீரணமாகத உணவு
  இப்படியே நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன!
  
    வயிற்று உபாதை, அஜீரணம், அசிடிட்டி, ஒபிசிடி, அல்சர்
  ஆளுக்கு ஒரு நோயால் அவதிப்பட லாயினர் அனைவரும்
    ஆடையும் அப்படியே மாறிப்போனது மொழியும் மாறின!
  மிச்சம் இருப்பது மேலுக்கு ஏதும் வாராமல் காப்பது என்று
   மிச்சத்தை மீட்போம்! முடிவெடுத்தனர் அகத்தியன்-மனைவி
  அச்சம் தவிர்த்தனர் அங்கிருந்து அவர்களின் ஊர் திரும்பினர்
   மிச்சத்தை மீட்டினர்! ஆரோக்கியம் திரும்பியது !
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai