சுடச்சுட

  
  இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த
  மரங்கள் எல்லாம் மறைந்து போகிறது
  சிறு குழந்தைகள் சிரித்து விளையாடிய
  மணல் கோட்டைகள் தகர்ந்து போகிறது…….
  
  எட்டிப் பார்த்தாலே நம்முகம் காட்டிய
  கிணறுகள் எல்லாம் வற்றித்தான் போனது
  காய்ந்த புல்லை மேய்ந்த பசுக்களின்
  தாகமதைத் தீர்த்த குளங்களும் காணவில்லை……
  
  ஆடிப் பெருக்கிலே கூடிக் களித்த
  ஆற்றுப் படுகைகள் எல்லாம் இன்று
  சதையினை இழந்த எலும்புக் கூடுகளாய்
  மணலைக் காணாமல் பாறைகளாய் பளிச்சிடுகிறது…….
  
  குன்று தோறும் இருந்த குமரனையும்
  குடிபெயரச் செய்து விட்டே இன்று
  குத்தாட்டம் போடுகிறார் மலைகளைப் பிளந்தே
  மாபெரும் வணிகம் செய்யும் கயவர்கள்……..
  
  பருகும் நீருக்கும் பங்கம் விளைவித்தே
  பட்டணம் முதலே கிராமம் ஈறாக
  தண்ணீரை வெண்ணீர் விலைக்கு விற்றே
  பண்ணீரில் குளித்து மகிழ்கிறார் பலரும்…….
  
  இத்தனைக்கும் இடையில் மிச்சத்தை மீட்கவே
  கச்சத்தீவு கனவுகளை விதைத்து நமது
  மனதையும் மூளையையும் மழுங்க அடிக்கிறார்கள்
  நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகள்……
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai