சுடச்சுட

  

  அரசியல்வாதிகளிடம் பணத்துக்காக 
  ஓட்டினை அடகு வைத்தோம்...

  ஆங்கில வழி பள்ளிகளிடம் 
  தாய்மொழி தமிழினை அடகு வைத்தோம்...

  சொந்த வீடு,சாலை விரிவு காரணங்களுக்காக
  மரங்களை வெட்டி மழையினை அடகு வைத்தோம்...

  மதுபான கடைகளில் மரியாதையையும் 
  உடல் ஆரோகியத்தையும் அடகு வைத்தோம்...

  தொழிற்சாலையின் மாசு காற்றில் தூய 
  காற்றினை அடகு வைத்தோம்...

  பன்னாட்டு நிறுவன வேலைமேல் கொண்ட மோகம் 
  காரணமாக விவசாயத்தை அடகு வைத்தோம்...

  தேவையற்ற சிலவற்றிற்காக 
  தேவையான பலவற்றை அடகு வைக்கிறோம்...

  போராடி பெற்ற சுதந்திரத்தை 
  "போராடி" , "போராடியே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 
  விழித்தெழுந்து போராடுவோம்"...!

  அடகு வைத்ததையும் , அடகு வைக்க 
  எஞ்சியுள்ள  "மிச்சத்தையும் மீட்போம்"

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai