சுடச்சுட

    
    புலரும்   பொழுதோ   புகையில் புதைய
    மலரும் மனிதவாழ்வோ கருவில் கருக 
    தொடர்கிறது இங்கே தொழில்நுட்ப புரட்சி 
    தொலைந்து போனதே இயற்கையின் மலர்ச்சி !
    
    காண்பது எல்லாம் கான்கிரீட் காடுகள் 
    காணாமல் போனவை  பசுமைக் காடுகள்
    விதைக்கும் விதைக்கும்கூட  கையேந்தும் 
    விதியாக  மாறிப்போன    கையறுநிலை !
    
    சுகம்என நினைக்கும் இன்றைய தேவைகள் 
    சுமையாகிப் போகுமோ நாளைய தலைமுறைக்கு !
    அச்சத்தில் வாழ்வதை விடுத்து  இனி 
    மிச்சமிருக்கும் இயற்கையை மீட்டெடுப்போம் வாரீர் !
    
    மலையும் மடுவும்    நிலைக்க வேண்டி
    மரமும் செடியும்  வளர்த்திடுவோம் !
    மண்ணின் தன்மை காக்க வேண்டி 
    மக்காத   நெகிழிகளைத் தவிர்த்திடுவோம் !
    
    புவிவெப்பமும் மாசும் குறைய வேண்டி
    புகைவிடும் வண்டிகளுக்குத் தடையிடுவோம் !
    புல்லும் பூவும் மலர வேண்டி 
    பூமியில் பசுமையான விரித்திடுவோம் !
    
    நஞ்சாகிப்போன பஞ்சபூதங்களைக் காத்து 
    எஞ்சியுள்ள மனித குலத்தை தழைக்கச்செய்வோம் !
    வளமையான   சுற்றுச்சூழலே உலகில் 
    வலிமையான சந்ததியரை உருவாக்கும் என்பதால் !
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai