சுடச்சுட

  
  ஜன்ம ஜன்மங்களாய் ஜலத்தினில் 
  ஜலக்கிரீடை செய்யும் ஜன்துக்களுக்கு 
  ஜகத்தினில் ஏனிந்த சாபம்?
  
  ஆழியும், குட்டமும், நீர்த்துறைகளும்
  ஆண்டாண்டுகளாய் நீரினங்களை
  நீக்கமற ஸ்வீகரிக்கின்றன.
  
  அழியா வரம் பெற்ற
   பிளாஸ்டிக்கை உலகில் உலவவிட்டதால் 
  பங்கப்பட்டதென்னவோ பாவப்பட்ட நீரினங்கள்தாம். 
  
  அகழிகள் ஆழிக்கு அள்ளிச்செல்லும் 
  அபத்த அழியா வார்ப்பொருளை 
  புசிக்கும் கயல்களின் நிலையையும், 
  கயல்களைப் புசிக்கும் புள்ளினங்களின் 
  இன்றைய நிலையை அறிவோமா? 
  
  அங்கம் நசிந்து நாபி பெருத்து
  அகால மரணத்தால் நலிந்துகொண்டிருக்கும் 
  அவைகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? 
  
  நிராகரிப்போம் பிளாஸ்டிக் மோகத்தை 
  ஏற்போம் மரபுப் பொருட்களை 
  நீரின புள்ளினத் தோழமைகளை மீட்போம்.  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai