சுடச்சுட

    
    வாழையடி வாழையென நமக்கெல்லாம் வந்திட்ட‌
       வளங்களைநாம் சீராகக் காக்காமல் சிதைத்திங்கு
    பாழாகச் செய்ததொரு தலைமுறையாய் ஆனோமே !
       பின்திரும்பி பார்த்துணரும் நன்நேரம் இதுதானே !
    
    மண்பானை, பீங்கானை மறந்தேதான் ப்ளாஸ்டிக்கை
       'மாடர்னாய்' பார்த்தோமே ! மாசாச்சு நமைசுற்றி !
    முன்னேறும் வழியென்று "கேட்ஜெட்"டின் பின்சென்று
       அதில்மூழ்கி மறந்தோமே உறவோர்கள் நிலைபற்றி !  
    
    "நிலமெங்கள் உரிமை"யென ஆற்றுவழி பாதையிலும்
       புதுவீடு கட்டிகுடி புகுந்ததனால் நீர்வழிகள்...
    வளமெல்லாம் சேர்க்காமல் வறண்டிங்கு போனதுவே !
       வருந்தியேதான் என்செய்ய திருந்தஒரு வாய்ப்பிதுவே !
    
    வந்திடும்நம் சந்ததியர் முன்னோர்கள் தந்தவற்றை
       வாழ்வினிலே காணாமல் போகின்ற நிலைவருதே !
    முந்தியேதான் சேர்ந்திடுவீர்! வருகின்ற தலைமுறைக்கு
       மிச்சமதை மீட்டிடுவோம்! நல்லவழி காட்டிடுவோம் !      
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai