சுடச்சுட

  
  மிச்சத்தை மீட்டெடுக்க மிகுதியும் பலர்க்காசை
  கச்சத் தீவினையும் கயவர்க்குத் தாரை வார்த்தார்
  பச்சைத்  தமிழனையே  பகடைக்  காயாக்கி
  சொச்சமே யில்லாமல் சுரண்டிட்டார் நாடுதனை!
  
  ஆற்றுமணல் சுரண்டல் அதன்பின் தாதுமணல்
  கிரானைட் குவாரிகளில் கணக்கின்றி பெருஞ்சுரண்டல்
  ஊரெங்கும் கிடந்த உதிரி நிலங்களையே
  ஆள்வோர் பெயரால் அப்படியே மிகச்சுரண்டல்!
  
  ஆறடி நிலந்தான் அடிநிலத்தில் புதைவோர்க்கு
  அதுகூடச் சொந்தமில்லை சுடுகாட்டில் எரிவோர்க்கு!
  இருந்தும் மனிதன் இன்னும் சுரண்டுகிறான் 
  இல்லாதவனைக் காட்டிலும் இருப்பவனே பெருஞ்சுரண்டல்!
  
  சுரண்டி வாழ்வதையே சுகமாய்க் கருதுமிவர்
  மிரண்டே வாழ்ந்து வெந்துயரில் மிகவுழந்து
  தரந்தாழ்ந்து போகின்றார்!தன்மதிப்பை இழக்கின்றார்!
  இவர்களிடமிருந்து இந்தியாவை நாம் மீட்டெடுப்போம்!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai