சுடச்சுட

  
  சுந்தரத் தாய்மொழியில் கற்பதற்கு மனமுண்டா…?
  சுரண்டிப்பிழைக்காது அரசியல் செய்வோர் எவருமுண்டா…?
  சுகம்பார்க்க காசுவாங்கா மருத்துவமனை ஏதுமுண்டா…?
  சுயவிளம்பரம் தேடாத மனிதரென்று யாருமுண்டா…?
  
  சுங்கவரிச் சாவடிகள் இல்லாத சாலையுண்டா…?
  சுற்றுப்புறத் தூய்மை சற்றேனும் இங்குண்டா…?
  சுற்றத்தைப் பேணுகின்ற மனப்பான்மை சிறிதுமுண்டா…?
  சுதந்திரம் கிடைத்தபின்னும் பேச்சுரிமை என்பதுண்டா…?
  
  வன்முறைகள் இல்லாத நாடென்பது ஒன்றுண்டா…?
  வகைப்பாடு இல்லாத மனிதகுலம் இங்குண்டா…?
  வசதியில்லா மாணவர்க்கு கல்விகற்கும் வாய்ப்புண்டா…?
  விளைநிலங்கள் மனையாகா நிலையேதும் வருவதுண்டா…?
  
  முதியோர் இல்லங்கள் முளைக்காத நிலையுண்டா…?
  மதுவிற்கு அடிமையாகா தலைமுறையும் இங்குண்டா…?
  மண்வளங்கள் காப்பதற்குத் திட்டங்கள் ஏதுமுண்டா…?
  மனதிற்கு இதமான சூழ்நிலைகள் மெத்தவுண்டா…?
  
  நலத்திட்டம் எல்லாமே உரியவரை அடைவதுண்டா…?
  நெளிவுசுளிவு தெரியாதோர் வாழ்வதற்கு வாய்ப்புண்டா…? - நமைச்சூழ்ந்த 
  நல்லனவெல்லாமே இவற்றுள் தப்பிப்பிழைத்த மிச்சங்கள்…
  நல்வாழ்வு வாழ்ந்திடவே இம்மிச்சங்களை மீடடெடுப்போம்…!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai