சுடச்சுட

  
  செயற்கை உணவு முறை எங்கும் நிறைந்திருக்கு
  அயர்வுண்டாக்கி ஆளைக் கீழே வீழ்த்தும் செருக்கு
  உயர்வுண்டாக உடல் வளத்தில் உறுதி பெருக்கு
  இயற்கை உணவே இனிய உணவென பிடி இறுக்கு
  
  எதிர்கால சந்ததிக்கு ஊறு விளைக்கும் செயல்களை
  முதிர்ந்த அறிவோடு தடுத்து நிறுத்திட முயன்றிடு
  உதிர்ந்த தீயவைகளை இனியேனும் விலக்கிட
  அதிர்வின்றி அச்சமின்றி மிச்சத்தையேனும் மீட்டிடு
  
  எங்கும் குடி எப்போது குடி என்று பாமர மக்கள்
  சங்கு ஊதிடச் சாகும் நிலை மாற்ற குடி கெடுத்திடும்
  அங்கிங்கெனாதபடி தோன்றி முளைத்த கடைகளை
  தங்குதடையின்றி அடைத்தே குடிகாரர்கள் வளராது
  
  வளர்ந்தவர் தொடராது வளமான எதிர்காலம் காண
  அளந்து பார்க்கும் நிதிநிலைக்கு மாற்று கண்டாவது
  பிளந்து நிற்கும் இளந்தலைமுறை இளைஞர்களை
  உளம் மாறாமல் மிச்சமானவர்களை மீட்போமே
  
  உடல்நிலை கெடுக்கும் உயிர் வாங்கித் தொழிற்கூடம்
  கடல்நிறைய செல்வம் வேலை தந்தாலும் வேண்டாம்
  மடல்நிறைய மனு எழுதி மக்களுக்காக என அதனை
  திடமனதோடு எதிர்த்துநின்று மிச்சத்தை மீட்போமே.
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai