சுடச்சுட

    
    பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா 
    இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா 
    தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை 
    தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !
    
    வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே 
    நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே 
    பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம் 
    வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !
    
    பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
    அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம் 
    ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது 
    மனிதனின் மிச்சமோ மனிதனே தீண்டத்தக்கதாக அமைகிறது !
    
    மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே 
    பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே 
    ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே 
    பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !
    
    ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான் 
    தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான் 
    பணக்காரனோ மேன்மேலும் தன் தலைமுறைக்குச் சேருகிறது 
    மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
    
    ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா 
    ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா 
    வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா 
    விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai