சுடச்சுட

  
  அள்ளிக்  காசாக்கி
  அடாவடிகள் மிகச்செய்து
  ​பள்ளிக் குழந்தைகளும்
  பருகும் நீர்க்கேங்க
  வெள்ளத் திட்டினையும்
  விலைபேசி விற்றுவிட்ட
  
  கள்ளத் திருடர்களை
  கச்சிதமாய் விலக்கிவிட்டு
  ஆற்றில்  நீரூற
  அனைவருமே உளமகிழ
  மிச்சமுள்ள மணலை
  மீட்டே எடுத்திடுவோம்!
  
  காசொன்றே குறியென்று
  கயமைத்தனம் மிகச்செய்து 
  ஆட்சியின் பெயரால்
  அக்கிரமங்கள் பலபுரிந்து
  நாட்டைக்  கூறாக்கி 
  நயவஞ்சகம் பலசெய்து
  
  நல்லோரை நசுக்கி
  நல்லதையெல்லாம் அழித்த
  வஞ்சகரை விரட்டிவிட்டு
  நல்லகண்ணு போன்ற
  நலம்பேணும் தலைவர்களை
  மீட்டே எடுத்திடுவோம்!
  
  அத்தனையும் மீட்டெடுக்க 
  அகவை  நமக்கில்லை!
  இளைஞர்களே வாருங்கள்!
  இருப்பவற்றை மீட்டெடுங்கள்!
  உங்கள்  வருங்காலம்
  உயர்வாக வேண்டுமெனில்
  மிச்சத்தை மீட்டுடெடுக்க
  விரைவாக நீங்களெல்லாம்
  
  ஒன்றிணைந்து வாருங்கள்!
  உறுதியுடன் முன்னேறுங்கள்!
  வீணர்களை அழித்திடுங்கள்!
  விளைநிலங்களை தழைத்திடுங்கள்!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai