Enable Javscript for better performance
ஒருமுறையேனும்: ஆர்.அருண்குமார்- Dinamani

சுடச்சுட

    
    எத்தனையோ கனவுகள் மனதுக்குள்
    அத்தனையும் பலிக்கவில்லை.
    வித்தகனாக வேண்டும் என்றகனவு
    பித்தனாக அலையவைத்தது.
    நல்லவனாக வேண்டுமென்ற நனவு
    மெல்லவே மாறிப்போனது.
    வல்லவனாக நினைத்தபோதில்
    சொல்லமுடியா வேதனை தந்தது.
    நாட்டைத் திருத்த எண்ணிய மனமோ 
    வேட்டை நாயாய்  திரிய வைத்தது.
    கோட்டை கட்ட போராடியபோது
    போட்ட திட்டமெல்லாம் மறைந்தது.
    உண்மையைக் கூறினால் உலகமோ
    அண்மையில் வராதே என்றது.
    வண்ணமாய் ஒளிர்ந்தபோது
    எண்ணமோ அலைபாய்ந்தது.
    ஒருமுறையேனும் நினைத்தபடி
    உள்ளம் மாறவேண்டும்.
    மறுமுறையாவது மனமெல்லாம்
    உறுதுணைபுரிய வேண்டும்.
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai