சுடச்சுட

    

    ஒருமுறையேனும்: கவிஞர் பேராசிரியர் பு மகேந்திரன்

    By கவிதைமணி  |   Published on : 25th June 2018 06:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரு முறையேனும் உலகைச் சாகடி
    நான் மட்டும் போதும்...
    ஊழிக்கால சிவன் போல
    
    அனைத்தும் புதிது.
    ஒரு முறையேனும் தண்டிக்கணும்
    
    இங்கு எங்கு நலம் உலகில்
    பாழாய் வாழுது பழுதாய்
    கசப்பும் கருப்புமாய்
    யார் இறந்தால் என்ன
    யார் எப்படியானால் என்ன
    நான் சுகப்பட வேண்டும்
    
    ஒரு முறையேனும் இவர்கள்
    வாழ்வை வாழ்ந்துள்ளனனரா
    சாவு வீட்டிலும் சுயலாபம் தேடும்
    சாவுராக்குகள்
    சாகட்டும் ஒரு முறை
    
    புதிய தோர் பூமி
    
    ஒருமுறையேனும் வந்து விடாதா
    நல்ல காற்று சுகப்படாதா
    தீயவை அழிந்து விடாதா
    ஒரு முறை தீயதை அழிக்க
    எனக்கு வரம் தா கடவுளே
    ஒரு முறை சுத்தமாய் கழுவி
    சுத்தப்படுத்துவோம்.
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai