சுடச்சுட

  
  உரசும் ஊழல் சேற்றிலிருந்து விலகி
  அரசியல் தருமத்தை மறக்காது பழகி
  சிரசு முதல் கால்வரை அன்பில் நனையும்
  முரசு ஒலி ஒருமுறையேனும் கேட்பேனோ
  
  சாதாரணப் பணியும் லஞ்சத்தில் நடக்கும்
  ஆதாரம் கேட்டு அலைய வைக்கும் என்றும்
  சேதாரமில்லாது செயல்கள் நடக்கும் அந்த
  மாறாத நிலை ஒருமுறையேனும் வருமா
  
  ஆதி மனிதன் நாகரிகமில்லாதிருந்தாலும்
  சாதி மதம் என உருவாக்கி சதிராடியதில்லை
  மோதிக் கொண்டது உணவுக்காக மட்டுமே
  நாதியற்ற இழிவு ஒருமுறையேனும் நீங்குமா
  
  ஓடியோடி உழைத்த நிலை இன்றில்லை
  ஆடிப்பாடி மிகுந்திடும் நேரமே உழைப்பானது
  கூடிப்பேசி ஒன்றாகி உழைத்து உயர்வதென
  வாடிப்போகா நிலை ஒருமுறையேனும் வருக
  
  கண்டதே காதல் கொண்டதே கோலம் என்றாகி
  அண்டம் முழுதும் பாலியல் வேட்கையில் மகிழ
  உண்டான ஆணாதிக்கப் போக்கு எங்குமாகி
  நண்டாகி நாசமாகாது ஒருமுறையேனும் செல்க
  
  சேவை மனிதகுல மாயை என ஒதுங்கி நின்று
  தேவை காப்பாற்றும் ஆளென வீண்பேச்சு பேசி
  ஆமை போல் அசைந்தாடி ஒத்துழையாது
  தீமை செய்யாது ஒருமுறையேனும் இருந்திடுக,
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai