சுடச்சுட

  
  தண்ணீரே வாராதத் தெருக்கு ழாய்கள்
        தாரின்றிக் கல்குத்தும் வீதிச் சாலை
  மண்சேறாய்ச் சாக்கடைநீர் தேங்கும் முற்றம்
        மறந்துமொளி வீசாத  மின்கம் பங்கள்
  கண்மறைக்கும்  ஆளுயர  விளம்ப ரங்கள்
        காட்சிதரா ஆட்சியாளர் என்றே நாளும்
  எண்ணற்ற பிரச்சனைகள்  எதிரில் நிற்க
        எவரேனும் கேட்பதற்கு வந்த துண்டா !
  
  இயற்கையினை  அழிக்கின்றார் ! சுற்றுச் சூழல்
        இனியகாற்றை  மாசாக்கிக் கெடுக்கின் றார்கள்
  வயல்ஏரி குளங்களினை விற்கின் றார்கள்
        வளம்தந்த ஆற்றுமணல் அள்ளு கின்றார்
  அயல்மொழியில் கல்விதந்து வணிக மாக்கி
        அன்னைமொழி  தமிழ்மொழியை ஒதுக்கு கின்றார்
  செயல்பட்டே  இவைகளினைத் தடுப்ப தற்குச்
        செழுந்தோளார் எவரேனும் வந்த துண்டா !
  
  அரசியலார் செய்கின்ற தவற்றைக் கேட்க
        அரசாங்க  அலுவலர்கள்  கையூட்  டோட்டக்
  குரலெடுத்து  முழக்கமிட்டே  ஒருவ  ரேனும்
        கூடிடுவோம் ஒற்றுமையாய் என்ற துண்டா
  விரல்நீட்டிக்  கயவரினைச் சுட்டி நீங்கள்
        விரட்டுதற்கே  ஒருமுறைதாம் எழுந்து விட்டால்
  வரலாற்றை  மாற்றிடலாம் ! தூய ஆட்சி
        வளவாழ்வு  இங்கமையும் வாரீர் வாரீர் !
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai