சுடச்சுட

    
    ஒருங்கிணைத்து, வழிகாட்டி
      ஒருகுழுவை நடத்திடவே
    ஒருதலைவன் வேண்டுமதில்
      சந்தேகம் ஏதுமிலை !
    தலைவனவன் காட்டும்வழி
      கண்மூடி செல்லுதலோ
    வலைதன்னில் வலிந்தேநாம்
       வீழ்தல்போல் ஆகிடுமே !
    
    சொன்னவழி நல்வழியா?
      சிறந்ததொரு நன்முறையா?
    என்றுஒரு முறையேனும்
      சுயமாக சிந்திப்போம் !
    தவறென்றால் தலைவனிடம்
      தயங்காமல் எடுத்துரைப்போம் !
    எவருக்கும் பயந்தேநாம்
      எதையும்தான் செய்யோமே !
    
    சரியென்ற வழியதுவே
      நமைசேர்க்கும் நல்லிடமே!
    'சரி'யென்று யாவைக்கும்..
      சரியின்று சொல்லோமே !
    ஆடுகளின் கூட்டம்போல்
      அலைந்தேபின் செல்லோமே !
    கேடுவரும் எனதெரிந்தும்
       கெட்டவழி செல்லோமே !
    
    ஒருமுறையே தானும்நாம்
      செய்யும்முன் சிந்திப்போம் !
    ஒருகுறையும் வாராதே !
      வந்தாலும் எதிர்கொள்வோம் !
    எண்ணியேநீ துணிகவென‌
       சொன்னானே அன்றேதான் !
    கண்மூடி செல்லாமல்
       கருத்தோடு சிந்திப்போம் !
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai