சுடச்சுட

  

  ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்

  By கவிதைமணி  |   Published on : 25th June 2018 05:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்புத்தாய் தன்சேய் காக்க
  ஒருமுறையேனும் மறப்பதுண்டோ!
  ஆசைப்பேய் மனம் ஆளாமல்
  ஒருமுறையேனும் இருப்பதுண்டோ!
  இன்பம் வேண்டாம் என்று
  ஒருமுறையேனும்
  இதயம் துடிப்பதுண்டோ!
  வென்ற பின்னர் அரசியலார்
  ஒருமுறையேனும்
  நமக்காக வருவதுண்டோ!
  வேடிக்கை மனிதர் கூட்டம்
  ஒருமுறையேனும்
  வெற்றி பெற்ற நிலைகளுண்டோ!
  குற்றம் செய்யும் மனமுடையார்
  ஒருமுறையேனும்
  தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ!
  பலமுறை செய்திடும் செயலை
  ஒருமுறையேனும்
  எண்ணிச்செய்வோம்
  பலரும் வாழ்வில் உயர்ந்திடவே
  ஒருமுறையேனும்
  பரமனைத் துதித்திடுவோம்.
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai