சுடச்சுட

  
  சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்
    சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!
  எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்
    எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!
  மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது
    மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!
  தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-
    தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.?
  
  தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்
    தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!
  இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா
    இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!
  ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை
     உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!
  வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்
     வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!
  
  ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்
    உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!
  கருவிலே இருக்கும் போதே நாங்களும்
    கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!
  இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத
    உன்னொளியால் நீரிலும் மலர் மலர்கிறது.!
  உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த
    உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai