சுடச்சுட

    
    மறை செய்யும் முறைகளை 
    ஒரு முறையேனும் ஆய்ந்தோமா !
    
    மறைகளையும்  வேதங்களையும் 
    ஆவல்கொண்டு என்றாவது கற்றோமா! 
    
    நற்குலத்தில் பிறந்தாலும் அதுபற்றி 
    கற்க  நினைப்புடன் முயன்றோமா !
    
    பணமே  உயிரென தேடி அலைந்தோமே 
    மிச்சப்படுத்தி தர்மங்கள் செய்ய நினைத்தோமா !
    
    பணத்திற்காக  தகுதியற்றவனை மெச்சினோமே 
    நடுநிலை காணமுடியாமல் வெட்கப் பட்டோமா !
    
    ஒரு சிலவற்றிற்கு தன்மானத்தையும் அடகுவைத்து 
    கூனி குறுகி  நின்ற நிலைமையை நினைத்துப்பார்த்தோமா !
    
    மனிதனே, ஒரு முறையேனும் உனது மனசாட்சியை நினை 
    சூதினை என்றாவது தர்மம் வெல்லும் என்பதை நினை !
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai