சுடச்சுட

  
  ஒருமுறையேனும்... உண்மையாய் நேர்மையாய் உளம்விரும்பி
  மக்களின்  நலனில்  மகத்தான  விருப்பங்  கொண்டே
  அரசியல்வாதிகள் அத்தனைபேரும் செயல் பட்டாலே
  சிரமங்கள் மறைந்து சிரித்திடாரோ சாமானியர்கள்?!
  
  ஒருமுறையேனும்... உளத்தின் ஆழத்தில் நினைத்து 
  எல்லாம்  வல்ல  இறைவனோடு   ஒன்றி
  நல்லதே  நடக்க  நயவஞ்சகம்  ஒழித்து 
  இறைஞ்சிக் கேட்டால் இல்லையென்பானோ இறைவன்?!
  
  ஒருமுறையேனும்...காந்தியாய் நம்மை உருவகஞ்செய்து
  உண்மையை  மட்டுமே  உளமெங்கும்  நிறைத்து
  செய்யுந்  தொழிலை  தெய்வமென  மதித்து 
  நடந்து கொண்டால் நாமுய்வோம் நன்றாய்!
  
  ஒருமுறையேனும்...வாஞ்சிநாதன், வ.ஊ.சி.,கட்டபொம்மன்
  பட்ட  துயரைப்  படித்தாவது   அறிந்தால்
  சுதந்திரம்  மீது நமக்கு  சொல்லொணாப்  பற்று
  வெள்ளமென பெருகும்! வீண்ஜம்பங்கள் குறையும்!
  
  ஒருமுறையேனும்...வள்ளுவன்வகுத்த வான்குறள் தன்னை
  செம்மையாய்ப்  படித்து  சிறப்பாய்  அதன்படி
  நடந்தே  காட்டினால்  நானிலம்  மெச்சும்
  பிறந்த பயனையும் பெருமையாய் அடையலாம்!
  
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai