சுடச்சுட

  
  நாட்டின் நிலவரம்
  நாளும் கலவரம்
  அம் மென்றால்
  ஆர்ப்பாட்டம்
  
  உம் மென்றாலே
  போராட்டம்
  சோறுபோடும்
  
  உழவர் கூட்டம்
  கூறு போடபிரிந்து
  விவசாயமும்
  செத்ததிங்கே
  தீவிர வாதமும்
  பாலியல்கொடுமையும்
  தினமும் நடக்கிறது
  
  குடும்ப உறவுகளோ
  குடை சாய்ந்துகிடக்கிறது
  நாடு நலம் பெற
  நலத்திட்டங்கள்
  விரிவடைய
  
  நயத்தை இழந்து
  சுயத்தையும் இழந்து
  தவிக்கும் மக்கள்
  
  துயரம் போக
  நல்லாட்சி அமைந்திட
  வல்லரசாய் இந்தியா
  நல்லரசாக நானிலத்தில்
  
  ஒரு முறையேனும்
  வருவாரா காமராசர்போல்
  ஒருவர்,,,,,,,,
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai