சுடச்சுட

  
  ஒருமுறையேனும்
  குறைந்தபட்சம் 
  நகராட்சி உறுப்பினராகிவிடும்
  நப்பாசையில்
  அரசியலில் ஈடுபட்டு வருகிறான்
  அரசியல்வாதி. 
  
  ஒருமுறையேனும்
  இமயமலை ஏறிடவேண்டுமென
  தீவிர இலட்சியத்துடன்
  இயங்கிக் கொண்டுள்ளான்
  மலையேற்ற வீரன். 
  
  ஒருமுறையேனும்
  சுதந்திர காற்றைச் சுவாத்திட
  ஏங்கிக் கொண்டுள்ளான்
  இலங்கைத் தமிழன். 
  
  ஒரு முறையேனும்
  கடவுளைக் கண்டுவிட 
  வழிபட்டுக்கொண்டுள்ளான்
  பக்தன். 
  
  ஒருமுறையேனும் 
  சேரிக்குள் தேர் வரவேண்டுமென்று
  போராடிக்கொண்டுள்ளான்
  தலித். 
  
  ஒருமுறையேனும்
  தமிழ்நாட்டை
  தமிழன் ஆளவேண்டுமென்று
  தவமிருக்கிறான்
  தமிழன். 
  
  ஒரு முறையேனும்..... 
  
  ஒருமுறையேனும்
  மனிதராக வாழ்ந்து 
  மரணிக்க வில்லை 
  எவரும்.... 
  
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai