சுடச்சுட

  
  ஒரு முறையேனும் கோபப் படு
  நீயும் வாழும் மனிதன் அன்றோ?
  
  ஒரு முறையேனும் சிரித்து விடு
  சிரிப்பு மனிதனின் வரமும் அன்றோ?
  
  ஒரு முறையேனும் அழுது விடு
  அழுதால் வலிகள் அடங்கும் அன்றோ?
  
  ஒரு முறையேனும் மன்னிப் பாய்
  அதனால் உனக்கொரு இழப்பும் இல்லை
  
  ஒரு முறையேனும் எண்ணிப் பார்
  எதனால் என்றொரு கருத்தும் வரும்
  
  ஒரு முறையேனும் உன்னைப் பார்
  நீயும் உன்னையே உணர்ந்து கொள்வாய்
  
  ஒரு முறையேனும் தானம் கொடு
  கொடுத்த‌பின் இன்னும் தர முயற்சியெடு
  
  ஒரு முறையேனும் திருப்பிக் கொடு
  அடக்கி வைத்தென நன்மை பெற்றாய்
  
  ஒரு முறையேனும் மரத்தை நடு
  வெட்டிய பாவத்தை கழுவிக் கொள்ள‌
  
  ஒரு முறையேனும் மௌனம் பற்று
  பேசியே எத்தனை குழிகள் கண்டாய்
  
  ஒரு முறையேனும் ஊரைச் சுற்று
  படைத்தவன் தன்னையே மதிக்கும் படி
  
  ஒரு முறையேனும் மொழிகள் கற்று
  உனக்கு நீ பேசிடு அற்புதமே
  
  ஒரு முறையேனும் அமைதி கொள்ளு
  உள்ளத்தின் துயரங்கள் அடங்கும் பாரு
  
  ஒரு முறையேனும் அடங்கி நில்லு
  எட்டாத உயரங்கள் கிடைக்கும் பாரு
  
  ஒரு முறையேனும் நல்லது சொல்லு
  பொல்லாத சொற்களெல்லம் ஓடும் பாரு
  
  ஒரு முறையேனும் வாழ்ந்து விடு
  வாழ்க்கை என்பது அழகாய் வாழ்வதற்கே
  
  ஒரு முறையேனும் வாழ்ந்து விடு
  வாழ்க்கை எல்லோரையும் சிறப்பாய் வாழ்த்துவதற்கே
  
  ஒரு முறையேனும் வாழ்ந்து விடு
  இப்போ வாழாமல் எப்போதான் வாழ்வோம்
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai