சுடச்சுட

    
    அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள்
    கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது.
    வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது.
    
    மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுது
    அதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா.
    செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியது
    
    இவனின் இரத்தம் சொட்ட….
    அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீது
    அவள் பூசிய மண்ணாக
    
    வருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள்
    உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது.
    தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும்
    
    இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல்
    இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்……..               
                                                    
    
    
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai