சுடச்சுட

  
  உணவை உண்ணும் போது போற்றி
  வணங்கினோமா? விவசாயிகளை!
  தனதுநலனை விட்டு பொதுநலம் பேணும்
  செவிலியரை நினைத்தோமா?
  கனவு காணுங்கள் என்றே உரைத்த
  அப்துல் கலாம் புத்தகம் படித்தோமா?
  
  தினமும் ஒளி நல்கும் ஆதவனின் செயலை
  போற்றி மகிழ்ந்தோமா?
  அன்பாய் அன்னை அறிவாய் தந்தை
  அன்றாடம் வணங்கினோமா?
  பண்பாய் பழகி பாசத்தை கொட்டும்
  பாட்டி தாத்தாவை மகிழ வைத்தாமோ?
  
  தன்னிகரல்லா தனித்தமிழால் காலத்தால்
  காவியக் கண்ணதாசன் நினைத்தோமா?
  எண்ணற்ற எண்ணங்கள் வளைய வந்தாலும்
  நல்லெண்ணம் ஒன்றே வாழ்வை வளமாக்கும்
  நினைத்தோமா ? ஒரு முறையேனும்….
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai