சுடச்சுட

    

    ஒரு முறையேனும்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

    By கவிதைமணி  |   Published on : 25th June 2018 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூச்சு விட திணறுகிறது,
    இந்தியாவின் மூச்சுக்காற்று ,
    தலைநகரம் புது டில்லி –

    “காற்று” திரைப்படம்
    ஓட முடியாமல்
    முளைத்தது ஒரு புது வில்லி –
    அங்கே போட்டிருப்பது
    தார் சாலைகளா , கார் சாலைகளா ?
    நகர்ந்து கொண்டிருக்கிறது
    அந்தத் தேர்
    “குப்பை” என்ற அச்சாணியில் –
    வாய்க்குள் புகுந்த வாகனப்புகை :
    எச்சில் கூட பிசு பிசுக்கிறது –
    விலங்குகளையும் விடவில்லை ஆஸ்த்மா !

    அடுக்கு மாடிக்குடியிருப்புகளில்
    தொட்டால் அழுக்கு ஒட்டும் மேகங்கள் !
    சிறிகளால் விரட்டிக் கொண்டிருக்கிறது
     ஒரு கூட்டம் –
    எந்த துக்கத்தை மனதில் வைத்து
    கருப்பு சட்டை உடுத்தியது
    தாஜ் மஹால் ?

    மனிதக்கண்களுக்கு
    ஒரு மாசுப்போர்வை
    மங்கலாய் ஒரு பார்வை –
    போதும் – தடுத்து நிறுத்துங்கள்—
    ஒரு முறையேனும் – வாரத்தில்
    ஒரு முறையேனும்  
    மிதிவண்டியில் செல்லுங்கள் –
    சைக்கிளுக்கு கை கொடுங்களேன்..

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai