வாழைப் பழ அப்பம்
By மதி | Published on : 11th August 2016 05:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேவையானவை:
வாழைப்பழம் - 3
உலர்திராட்சை - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 20
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: நன்கு பழுத்த வாழைப்பழங்களின் தோலை அகற்றிவிட்டுக் கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
முந்திரி, உலர் திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் வாழைப்பழம், மைதாமாவு, சர்க்கரை, ஏலப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு நன்றாக காய்ந்தவுடன் வட்டங்களாக கரைத்த கலவையை ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்து சுடச்சுடப் பரிமாற வேண்டும்.