Enable Javscript for better performance
வெந்தயக் குழம்பு- Dinamani

சுடச்சுட

    
    bvbb

    தேவையான பொருட்கள்

    1.முளைகட்டிய வெந்தயம் – 2 தேக்கரண்டி

    2.சின்ன வெங்காயம்- அரை கப்

    3. உரித்த பூண்டு-10

    4. அரைத்த சின்ன வெங்காய விழுது- 1

    5. புளி- ஒரு எலுமிச்சை அளவு

    6. அரிசி கழுவிய நீர் -2 கப்

    7. உப்பு தேவைக்கேற்ப

    வறுத்து பொடிக்க வேண்டியவை

    1.மிளகு- 1 தேக்கரண்டி

    2.சீரகம்-1 தேக்கரண்டி

    3.உளுத்தம்பருப்பு-1 தேக்கரண்டி

    4.பச்சரிசி-1 தேக்கரண்டி

    5.வெள்ளை எள்-1 தேக்கரண்டி

    6.தனியா-1 தேக்கரண்டி

    7.வரமிளகாய்-5

    8. முளைகட்டிய வெந்தயம்-1 தேக்கரண்டி

    9. கறிவேப்பிலை தேவையான அளவிற்கு

    தாளிக்க

    1.கடுகு –தேவையான அளவு

    2.நல்லெண்ணெய்- தேவையான அளவு

    3.கறிவேப்பிலை- தேவையான அளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்

    அரிசி கழுவிய நீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

    வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்

    அதே வாணலியில் தேங்காய் துருவலை மிதமாக வதக்கி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்

    வாணலியில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதியுள்ள முளைகட்டிய வெந்தயத்தை போட்டு வதக்கவும்.

    அதில் சின்ன வெங்காய விழுதினை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதன் பின் சின்ன வெங்காயம் பூண்டினை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்

    ஊற வைத்த புளியை கரைத்து வதக்கியவற்றுடன் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும்

    பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு பொடித்து வைத்திருக்கும் தூளைபோட்டு நன்றாக சுண்டும் வரை கொதிக்க விடவும்

    பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக  சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

    உண்பதால் ஏற்படும் பயன்கள்

    நீரிழிவு நோயாளிகளுக்கு  சிறந்தது. உடல் சூடு தனியும். வயிற்றுப் பிரச்சனை, மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai