Enable Javscript for better performance
கொள்ளு மசியல்- Dinamani

சுடச்சுட

    
    kollu

    தேவையானவை:

    கொள்ளு - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் வற்றல் - 2
    சீரகம் - அரை தேக்கரண்டி
    தனியா - அரை தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - உரித்தது முழுதாக ஒரு கைப்பிடி அளவு
    தாளிக்க - தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:
    கொள்ளு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், சீரகம், தனியா,  1 ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து குக்கரில் 5 விசில்கள் வரும் வரை வேக விடவேண்டும். 

    சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெய்யில் அரை வதக்கலாக வதக்கி,  வெந்த கொள்ளுடன்  கலக்கி, உப்பு சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைத்து பரிமாறவும். கொள்ளு மசியல் தயார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai