Enable Javscript for better performance
நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 1- Dinamani

சுடச்சுட

    


    பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
    இந்நின்ற நீர்மை இனி யாம்உறாமை
    , உயிர்அளிப்பான்
    எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
    , இமையோர்தலைவா
    மெய்நின்று கேட்டுஅருளாய்
    , அடியேன் செய்யும் விண்ணப்பமே.


    உயிர்களைக் காப்பதற்காகப் பல அவதாரங்கள் எடுத்தவனே, இமையவர்களின் தலைவா, என்னுடைய உண்மையான விண்ணப்பத்தை நின்று கேட்டு அருள்செய்வாய், பொய்யான ஞானம், பொல்லாத நடவடிக்கைகள், அழுக்கு உடல் என்று தடுமாறும் இந்த மனிதவாழ்க்கை இனி எங்களுக்கு வேண்டாம், பிறவாநிலை அருள்வாய்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai