முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 5

தவநெறியில் நீங்கள் நில்லுங்கள்,

பிணக்குஅற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்குஅறு நலத்தனன், அந்தம்இல் ஆதிஅம் பகவன்,
வணக்குஉடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசைஅற அவன்உடை உணர்வுகொண்டு உணர்ந்தே.

ஆறுவகைச் சமயங்கள் உண்டு, அவற்றினிடையே பல மாறுபாடுகளும் உண்டு, ஆனால், அவை அனைத்தும் ஒருங்கே ஏற்றுக்கொள்கிற ஒருவன், எம்பெருமான்தான்.

அந்தச் சமயங்கள் அனைத்தும் நல்ல வழிகளை நினைத்துச் சொன்ன கணக்கில்லாத நன்மைகளைக்கொண்டவன் அவன், முடிவில்லாதவன், அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் அழகிய இறைவன், அவன் சொன்ன வணக்கத்தையுடைய தவநெறியில் நீங்கள் நில்லுங்கள், அவன் அருளிய அறிவைக்கொண்டு அவனை அறியுங்கள், மற்ற நெறிகள் அனைத்தையும் களைகளாக எண்ணிப் பறித்துவிடுங்கள், அவற்றிலிருக்கும் ஈரம் போகும்படி நன்றாக உலர்த்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com