Enable Javscript for better performance
நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 70- Dinamani

சுடச்சுட

    

    நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 70

    By நாள்தோறும் நம்மாழ்வார்  |   Published on : 08th October 2016 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    அடர்பொன்முடியானை, ஆயிரம்பேரானை,
    சுடர்கொள் சுடர்ஆழியானை, இடர்கடியும்
    மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
    யாதுஆகில் யாதே இனி?

    அடர்ந்த பொன்னாலான திருமுடியைக்கொண்டவன், ஆயிரம் பெயர்களைக்கொண்டவன், சுடர்களையெல்லாம் வெல்லும் பிரகாசமுள்ள சக்ராயுதத்தைக்கொண்டவன் எம்பெருமான்,

    அத்தகைய பெருமானை, என்னுடைய துயரங்களைப் போக்கும் தாயாக, தந்தையாக எண்ணினேன், எனக்குள்ளே அவனை வைத்தேன், இனி எனக்கு என்னவானால் என்ன?

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai