பாடல் - 10
மாய்ந்து அறும் வினைகள் தாமே, மாதவா என்ன நாளும்,
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம், தூபம், தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார் அந்தம்இல் புகழினாரே.
‘மாதவா’ என்று நாள்தோறும் சொல்லிப் போற்றினால், நம்முடைய வினைகள் தாமே தொலைந்துவிடும். பொருந்திய பொன்னால் ஆன மதிள் சுவரால் சூழப்பட்ட திருவனந்தபுரத்திலே அருள்தருகிறவர் நம் தந்தை, அவருக்காகச் சந்தனமும் விளக்கும் தூபங்களும் தாமரை மலர்களும் சிறந்தவையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்து அவரைப் போற்றவல்லவர்கள் எல்லையில்லாத புகழை அடைவார்கள்.