சுடச்சுட

  
  நம்மாழ்வார்

  பாடல் 11

  அவா அறச் சூழ் அரியை, அயனை, அரனை அலற்றி
  அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
  அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
  அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.

  பக்தர்களின் ஆசை தீரும்படி அவர்களைச் சூழ்கின்ற திருமாலை, பிரமனுக்குள்ளும் சிவனுக்குள்ளும் இருக்கும் பெருமானைப் போற்றி, உலக ஆசைகளைத் தீர்த்து வீடு பேறு பெற்றார் குருகூர்ச் சடகோபன், அவர் எம்பெருமான்மீது கொண்ட ஆசையாலே சொன்ன அந்தாதிப் பாடல்கள் ஆயிரம், அவற்றுள் முற்றிய ஆசையாலே பிறந்த இந்தப் பத்து அந்தாதிப் பாடல்களையும் அறிந்தவர்கள் உயர்ந்த பிறவிகளாவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai