பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1

திருமாலிருஞ்சோலை மலை
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1

பாடல் 1

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்வு இடம் தென் திருப்பேரே.

திருமாலிருஞ்சோலை மலை என்று சொன்னேன். உடனே, திருமால் வந்தான், என் நெஞ்சு நிறையும்படி புகுந்தான். அத்தகைய திருமால் சென்று சேர்ந்து அருள்புரியும் இடம், மிகச் சிறந்த மணிகளை உந்தித் தள்ளிக்கொண்டு வருகின்ற காவிரியின் தென்பக்கத்தில் உள்ள தென் திருப்பேர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com