பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 6

திருமாலிருஞ்சோலை மலையிலே
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 6

பாடல் 6

திருப்பேர் நகரான், திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்,
விருப்பே பெற்று, அமுதம் உண்டு களித்தேனே.

திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், திருமாலிருஞ்சோலை மலையிலே உறைகின்ற பெருமான் இன்றைக்கு என்னிடம் வந்தான், ‘இங்கேயே இருப்பேன்’ என்று என்னுடைய நெஞ்சு நிறையப் புகுந்தான், நான் அவருடைய விருப்பத்தைப் பெற்றேன், அமுதம் உண்டு களித்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com