சுடச்சுட

  

  பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

  By சொ. மணியன்  |   Published on : 25th October 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நம்மாழ்வார்


  பாடல் 11

  வந்தவர் எதிர்கொள்ள, மாமணி மண்டபத்து
  அந்தம்இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
  கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
  சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே.

  எம்பெருமான் அடியவர்கள் பரமபதத்துக்கு வர, அமரர்களும் பிறரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள், சிறந்த மணிமண்டபத்திலே அடியவர்கள் எம்பெருமானுடன் பெருகும் பேரின்பத்தில் திளைத்தார்கள், கொத்தாக மலர்கள் நிறைந்த சோலைகளைக் கொண்ட குருகூர்ச் சடகோபன் சந்த அழகோடு ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் எம்பெருமான் அடியவர்கள் பரமபதத்துக்கு வந்து பேரின்பத்தில் திளைத்தமையைச் சொல்கின்றன.

  இந்தப் பத்து பாடல்களையும் கற்க வல்லவர்கள், முனிவர்களாவார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai